பான்கார்ட் மின்வர்த்தக மையம்

1998ல் வடகோவையில் மூன்று நண்பர்கள், பங்குதாரர்களாக இணைந்து மிகவும் சாதாரணமாக உருவாக்கப்பட்டதுதான் பான்டெக் பிஸினெஸ் மெஷின்.  மின்னணு பொருட்களைக் கொண்டு தொடங்கப்படும் ஒரு வர்த்தகம் காலத்திற்கு தகுந்தாற் போல் மாறிக்கொண்டே வரவேண்டும், இல்லையென்றால் இவ்வர்த்தகத்தில் நிலைத்து நிற்பது என்பது இயலாத காரியம். வர்த்தகத்தின் வளர்ச்சிக்கேற்றவாறு மாறிய எங்களின் சின்னச் சின்ன மாற்றம் இன்று இந்தியாவில் அனைத்து வகையான மின்னணு, தொலைத்தொடர்பு, மற்றும் கண்காணிப்பு உபகரணங்களை ஒரே கூரையின் கீழ் விற்பனை செய்யும் நிறுவனமாக உயர்ந்திருக்கின்றது.

கடந்துவந்த பாதை அத்தனை எளிதானதாக இருந்துவிடவில்லை. காலத்தின் கட்டாயத்தில் தொலைந்து போன பங்குதாரர்கள், நண்பர்கள், நெருக்கடி, மற்றும் பெரும் வீழ்ச்சியை சந்தித்தே உயர்ந்திருக்கின்றோம். ஒவ்வொரு கட்டமாக பான்டெக் வளர்ச்சியடையும் போது, எங்களைச் சார்ந்த வாடிக்கையாளர்களும், எங்களோடு பணியாற்றிய அலுவலக ஊழியர்களும் உலகத்தின் நடைமுறைக்கேற்ப வளர்ந்து வந்திருக்கின்றார்கள். பான்டெக் பிஸினெஸ் மெஷின் 2003-ல் பான்டெக் கம்ப்யூட்டர்ஸ் ஆக மாற்றம் அடைந்தது.

 

மின்வர்த்தகம்

முன்பு சொன்னது போலவே காலத்திற்கு ஏற்றவாறு மாற்றங்கள் அமைகின்றன. மின்னணு கருவிகளில் தொடங்கி பின்னர் தொலைத்தொடர்பு கருவிகள், அதன் பின்னர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கருவிகள் என வர்த்தகம் வேறொரு எல்லையைத் தொட்டது. எங்களின் சேவையை மேலும் எளிதுபடுத்தவும், மிக விரைவில் எங்களின் வாடிக்கையாளர்களை சென்று சேரவும் பான்கார்ட் www.boncart.com என்ற இணைய சேவையைத்  தொடங்கி இருக்கின்றோம் தமிழின் பெருமையை எடுத்துக் கூறும் வகையில் தமிழ் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை முன்னிறுத்துகின்றோம். தமிழ் ஆயத்த ஆடைகள் மற்றும் சுத்தமான மஞ்சள் கிழங்கு ஆகியவற்றை ஏற்கனவே அறிமுகப்படுத்தியிருக்கின்றோம்… பண்ணைகளில் இருந்து பெறப்படும் பால் பொருட்கள், கல்செக்கு மற்றும் மரச்செக்கு எண்ணெய் வகைகள், மற்றும் இயற்கை விவசாய முறையில் உருவாக்கப்படும் பொருட்கள் ஆகியவற்றை எதிர் வரும் காலங்களில் எங்களின் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்த இருக்கின்றோம் என்பதை நாங்கள் மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கின்றோம்.

எங்களின் விருப்பம் 

பான்கார்ட் என்றுமே தரமான பொருட்களையே மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றது. வர்த்தகம் தொடங்கி பதினெட்டு வருடங்கள் நிறைவடைந்துள்ளது.வெறும் லாபத்தை மட்டும் குறிக்கோளாக வைத்திருந்தால் இத்தகைய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் நன்மதிப்பையும் பெற்றிருக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *